Yamaha’s new superbike launch in India on December 15!
Yamaha’s new superbike launch Yamaha motocorp இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் நேக்கெட் பைக்குகளின் பிரிவுகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஒன்றை விட ஒன்று சளைத்தது அல்ல. இருந்தாலும் இதைவிட சக்தி மிகுந்த பைக்கை மீண்டும் யமஹா இந்த ஆண்டு டிசம்பரில் ஆர் 3 எம்டி 03 என இரண்டு சூப்பர் பைக் விலை வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி அன்று வெளியிடுகிறது.
இந்த டவின் என்ஜின் திறன் கொண்ட பைக்குகள் இரண்டுமே 300 சிசி செக்மெண்டில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும்.
ஜப்பான் நாட்டை பூர்வீகமாக கொண்ட பைக் நிறுவனமான yamaha முதல் முறையாக இந்தியாவில் அதன் புது மாடல் YZF R3 மற்றும் MT 03 ஆகிய இரு பைக்குகளை வரும் டிசம்பர் மாதம் அறிமுகம் படுத்த உள்ளது. பிரீமியம் சூப்பர் பைக் செக்மெண்டில் இன்றுவரை வெளிநாடுகளில் மட்டுமே அதிகமாக விற்பனை செய்யப்பட்ட 300 சிசி திறன் கொண்ட பைக்குகளை யமஹா நிறுவனம் நேரடியாக இந்திய பைக் வாடிக்கையாளர்களுக்கு களம் இறக்க உள்ளது.
300cc Twin Engine
இந்த இரண்டு சூப்பர் பைக்குகளிலும் ஒரே ஒரு 321 சிசி ட்வின் சிலிண்டர் லிக்யூட் கோல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இதனுடைய பவர் 42 BHP மற்றும்
இதனுடைய டார்க் 29.5NM ஆகும். இது மட்டுமில்லாமல்
ஆறு ஸ்பீடு கியர் பாக்ஸ் வசதியும் எதில் உள்ளது.
இது மட்டுமில்லாமல் சிறப்பு வசதிகளாக LED லைட்டிங், மிகவும் அழகான LED ஸ்பீடா மீட்டர் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த வாகனத்தில் ப்ளூடூத் ஆக்டிவிட்டி வசதி இல்லை. இரண்டு பைக்குகளிலும் முன்பக்கம் USD போர்க், பின்புறம் மோனோ சஸ்பென்ஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் டிஸ்க் பிரேக் வசதியுடன் கூடிய டூயல் சேனல் ABS, 17 இன்ச் அலாய் வீல் ஆகியவையும் உள்ளன.
Highlights
யமஹா ஆர் 3 பைக்கை பொறுத்தவரையில் இது முழு ஸ்போர்ட்ஸ் பைக் செகனண்ட் ஆகும். இதன் முன் பக்கம் ஒரு ஸ்பிரிட் LED ஹெட்லைட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. DRLS போன்றவைகளும் இதில் உள்ளன. MT O3 என்பது ஒரு பிரீமியம் நேக்கட் வகை பைக் செக்மென்ட் ஆகும். இதன் முன் பக்கம் சிங்கிள் பேட் லைட் ப்ரொஜெக்டர் LED லேம்ப் வசதிகள் கொடுத்திருக்கிறார்கள்.
When is the release?
இந்த இரண்டு பைக்குகளும் YAMAHA நிறுவனத்தின் பிரீமியம் ஷோரூம் இல் மட்டும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பைக்கின் டெலிவரி என்பது டிசம்பர் 15 அன்று பைக்கை அறிமுகம் செய்த பிறகு தெரிவிக்கப்படும்.
Competitors
Yamaha YZF R3 பொறுத்தவரையில் இந்தியாவில் 300 சிசி செக்மெண்டில் தற்போது விற்பனையில் உள்ள KTM RC 390 ,TVS Apache RR 310; Kawasaki ninja 300, ninja 400 ஆகிய பைக்குகள் இதற்குப் போட்டியாளராக இருக்கும். அதேபோல MT 03 பொறுத்தளவில் KTM Duke 390 TVS Apache RTR 310, BMW G 310R போன்ற பைக்குகள் இதற்கு போட்டியாளராக அமையும்.
நீங்க என்ன மாதிரியான பைக் எதிர்பார்க்கிறீங்க உங்களுடைய விருப்பம் என்ன தற்போது நீங்கள் உபயோகப்படுத்தும் வாகனங்கள் என்ன என்பதையும் கமெண்டில் தெரியப்படுத்தவும் இந்த பைக்குக்கு வெயிட் பண்ற உங்க நண்பர்களுக்கு மறக்காம இந்த பதிவு ஷேர் பண்ணி விடுங்க மீண்டும் உங்களுக்கு எந்த மாதிரியான பதிவுகள் தேவை என்பதை மறக்காமல் பின்னோட்டமாக அழிக்கவும் நன்றி
2 thoughts on “Yamaha’s new superbike launch in India on December 15!”